முகப்பு /செய்தி /உலகம் / துருக்கி நிலநடுக்கம்.. பழிவாங்கும் மழை, பனி... இடிபாடுகளில் சிக்கியோரின் நிலை என்ன?

துருக்கி நிலநடுக்கம்.. பழிவாங்கும் மழை, பனி... இடிபாடுகளில் சிக்கியோரின் நிலை என்ன?

துருக்கி நிலநடுக்கம்

துருக்கி நிலநடுக்கம்

Turkey Earthquake | மோசமாக சேதமடைந்த சாலைகள், பனி மற்றும் தொடர் மழையால் துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaTurkeyTurkey

துருக்கியில் தியார்பகிர், கயாபினார் மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் சிதைந்துள்ள நிலையில், கடுங்குளிரும் வாட்டி வருகிறது. இதனால் பாதுகாப்பான இடங்களை தேடி மக்கள் செல்கின்றனர். முக்கிய சாலைகளில் கட்டட குவியல்கள் குவிந்துள்ளதுடன், சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் தரை வழியாக மீட்புப்படையினர் செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

காசியன்டெப்- அதானா இடையேயான சாலைகள் இரண்டாக பிளந்துள்ளன. சாலைகளை சீரமைக்க முடியாமல் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

ஹத்தாய் நகரில் மலைச் சாலையில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்களை இயக்க முடியாத சூழல் காணப்படுகிறது. சிரியாவில் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் உயிரிழந்ததால் சவக்கிடங்கில் இடம் இல்லாமல் சடலங்கள் குவியலாக வைக்கப்பட்டது பதைபதைக்க வைக்கிறது.

கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்புப்படையினரை எதிர்நோக்கியுள்ள ஒவ்வொரு நிமிடமும் பொன்னான நிமிடங்களாகும். ஆனால் பல நகரங்களில் மின் நிலையங்கள் பழுதாகி கிடப்பதாலும், மின்சார கம்பங்கள் சரிந்துள்ளதாலும் மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

துருக்கி சிரியா இடையேயான எல்லையில் வெப்பநிலை 10 டிகிரியாக குறைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டவர்களுக்கு 3 லட்சம் கம்பளிகள் தயார் நிலையில் உள்ளன. எனினும் சாலை மார்க்கமாக எடுத்துச்செல்வதில் சிக்கல் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் இடிபாடுகளில் சிக்கியுள்ளோருக்கு மருத்துவ ஆக்சிஜனும், தண்ணீரும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய சவால் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Turkey, Turkey Earthquake