முகப்பு /செய்தி /உலகம் / WATCH | துருக்கி உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!

WATCH | துருக்கி உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!

துருக்கி நிலநடுக்கம்

துருக்கி நிலநடுக்கம்

துருக்கியின் கரமன்மராஸ் நகரில் திரும்பும் திசையெல்லாம் கட்டடக் குவியலாக காட்சியளிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaTurkeyTurkey

துருக்கி - சிரியா எல்லையில் 24 மணி நேரத்திற்குள் 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதில் கட்டடங்கள் விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

துருக்கி-சிரியா இடையே உள்ள காசியான்டெப் நகரில் இன்று அதிகாலையில் 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியிலும், சிரியாவிலும் 140க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியைத் தொடர்ந்து, சிரியா, லெபனானிலும் நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 90 விநாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் 1300 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மீட்புப்பணி நடைபெற்று கொண்டிருக்கும் போதே 4 மணியளவில் மீண்டும் 7.6 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக 6:30 மணியளவில் மீண்டும் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் துருக்கியின் கரமன்மராஸ் நகரில் திரும்பும் திசையெல்லாம் கட்டடக் குவியலாக காட்சியளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் மண் குவியல் போல காட்சியளிக்கின்றன.

First published:

Tags: Turkey, Turkey Earthquake, Viral Videos