சிரியா மீதான ராணுவத் தாக்குதலை 5 நாட்கள் நிறுத்த துருக்கி சம்மதம்!

துருக்கியின் அங்காராவில் அந்நாட்டு அதிபர் எர்டோகனுடன்  அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சிரியா மீதான ராணுவத் தாக்குதலை 5 நாட்கள் நிறுத்த துருக்கி சம்மதம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 18, 2019, 12:23 PM IST
  • Share this:
சிரியா மீதான ராணுவத் தாக்குதலை ஐந்து நாட்கள் நிறுத்தி வைக்க துருக்கி ஒப்புக் கொண்டுள்ளது.

துருக்கியின் அங்காராவில் அந்நாட்டு அதிபர் எர்டோகனுடன்  அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தாக்குதலைத் தொடர்ந்தால் துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில் சண்டை நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதித்துள்ளது.

இதனால் பாதுகாப்பான பகுதி என கூறப்படும் சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து குர்திஷ் படைகள் வெளியேற வழி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் உயிர்கள் காக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஸ் ஆயுதக் குழு தலைமையிலான படைகள் ஒடுக்கியிருந்தன. ஆனால் துருக்கியில் குர்திஸ் இன மக்கள் தனிநாடு கோரி போராடுவதால் குர்திஷ் படைகளை ஒடுக்க சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்தி வந்தது.

Also see...
First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்