ஜப்பானில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை!

news18
Updated: June 19, 2019, 10:24 AM IST
ஜப்பானில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை!
நில நடுக்கம்
news18
Updated: June 19, 2019, 10:24 AM IST
ஜப்பானில் நேற்று இரவு 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு வடக்கு ஜப்பானின் யாமகட்டா அடுத்து உள்ள நடுக்கடலில் நிலநடுக்கம் மையம் கொண்ட, நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர்.

பல வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. சாலை மற்றும் மலைகளிலும் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் நீகட்டா மற்றும் யாமகட்டா பகுதிகளில் மின்சாரம் மற்றும் வீடு இல்லாமல் மக்கள் இரவு முழுவதும் தவித்து வந்தனர். இந்நிலையில் ஜப்பானில் சுனாமி வரும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

மேலும் பார்க்க:
First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...