ஆப்ரிக்க நாடு ஒன்றில் ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது இரண்டு திருமணம் செய்யாத ஆண்கள் சிறை செல்ல வேண்டும் என்ற சட்ட உள்ளதாக செய்தி ஒன்று தீயாய் பரவி பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆப்ரிக்க நாடானா எரித்திரியாவில் மக்கள்தொகை சுமார் 40 லட்சமாக உள்ளது. இந்த நாடு மேற்கில் சூடான், தெற்கில் எதியோபியா, தென்கிழக்கில் திஜிபோட்டி, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் செங்கடலும் உள்ளன. எதியோப்பிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரால் பிரிந்து உருவான நாடு தான் எரித்திரியா. 1998 முதல் 2000 வரை நடைபெற்ற இந்த போரில் சுமார் 1.5 லட்சம் எரித்திரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த போரில் லட்சக்கணக்கான ஆண்கள் இறந்து போனதால் அங்கு ஆண்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து பெண்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே, பெண்களுக்கு திருமணம் செய்ய போதிய ஆண்கள் கிடைக்கவில்லை என்பதால், பல பெண்கள் திருமணம் ஆகாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அந்நாட்டில் ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களை கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என 2016ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது.
மேலும், திருமணம் செய்யாத ஆண்களும், திருமணத்தை எதிர்க்கும் முதல் மனைவியும் சிறை தண்டனைக்கு ஆளாவார்கள் என அந்நாட்டு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் குறித்த செய்திகளை கென்யா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகள் பரபரப்பு செய்திகளாக வெளியிட்டு வந்த நிலையில், இப்படி ஒரு விசித்திர சட்டம் எங்கள் நாட்டில் இல்லை என எரித்ரியா மறுத்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் தொற்று... - 35 பேருக்கு பாதிப்பு உறுதி
இது தொடர்பாக எரித்ரியா நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யேமானே கெப்ரேமஸ்கல் எங்கள் அரசு கட்டாய பலதார திருமணத்தை சட்டமாக்கி ஊக்குவிப்பதில்லை. இது போன்ற செய்திகள் ஊடகங்களால் வேண்டும் என்றே திரித்து பரப்பப்படுகிறது என்று மறுத்துள்ளார். அதேவேளை, எரித்திரியாவில் மனித உரிமைகள் மிக மோசமாக மறுக்கப்பட்டு அந்நாட்டின் அரசு பல்வேறு கட்டாய சட்டங்கள் மக்கள் மீது திணிப்பதாக ஹுமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச அமைப்பு கூறி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.