ட்ரம்பின் புதிய கிரீன்கார்டு விதி: இந்தியாவுக்கு சிக்கல்!

அமெரிக்கர்களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிகளவில் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் புதிய கிரீன்கார்டு விதி: இந்தியாவுக்கு சிக்கல்!
ட்ரம்ப்
  • News18
  • Last Updated: August 13, 2019, 11:26 AM IST
  • Share this:
அமெரிக்காவின் கிரீன் கார்டு பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் இருக்கவேண்டும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு, அதிபர் ட்ரம்ப் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிரீன் கார்டு பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று குடியேறுவதற்கு, இந்தியா உள்பட மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசின் மருத்துவக் காப்பீடு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை அவர்கள் சார்ந்திருக்காமல், வருமானம் அதிகபடியாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.


இதனால் குறைந்த அளவு வருமானத்துடன் கிரீன் கார்டு விண்ணப்பிக்கும் ஏராளமானோர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் 4 லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் இதனால் பாதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் அமெரிக்கர்களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிகளவில் சென்றடையும் எனவும், அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க... கேரளாவில் கொட்டி தீர்க்கும் தென்மேற்கு பருவமழை

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...