ஹோம் /நியூஸ் /உலகம் /

”ஒப்புதல் தராவிட்டால் அரசு நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்”: கொந்தளித்த ட்ரம்ப்

”ஒப்புதல் தராவிட்டால் அரசு நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்”: கொந்தளித்த ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப்

ஒருவேளை பட்ஜெட்டிற்கு எதிராக செனட் சபை வாக்களித்தால் இன்று முதல் 8 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவர். அல்லது ஊதியமின்றி பணி செய்ய உத்தரவிடப்படும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மெக்சிகோ எல்லையை ஒட்டி சுவர் எழுப்ப 40 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு செனட் சபை ஒப்புதல் அளிக்காவிட்டல் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் இழுத்து மூடப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா - மெக்சிகோ இடையே பாதுகாப்பு காரணத்திற்காக சுவர் எழுப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கான 40 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு பிரதிநிதிகள் சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் அதிகம் உள்ள செனட் சபை இன்று பட்ஜெட் மீது வாக்களிக்கிறது. பட்ஜெட் நிறைவேற ஒத்துழைக்காவிட்டால் இன்று இரவு முதல் அரசு நிறுவனங்கள் மூடப்படும் என்றும், அது நெடுநாட்கள் நீடிக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஒருவேளை பட்ஜெட்டிற்கு எதிராக செனட் சபை வாக்களித்தால் இன்று முதல் 8 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவர். அல்லது ஊதியமின்றி பணி செய்ய உத்தரவிடப்படும். மேலும் பூங்காக்கள், வனப்பகுதிகள் மூடப்படும். காவல்துறை, போக்குவரத்து, நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் முடங்கும்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Donald Trump