முகப்பு /செய்தி /உலகம் / 4 ஆயிரம் சதுர அடி பரப்பு, 100 பேருக்கு உணவு தயாரிக்கும் அறை! ட்ரம்ப் பயன்படுத்தும் விமானத்தின் சிறப்பம்சங்கள்

4 ஆயிரம் சதுர அடி பரப்பு, 100 பேருக்கு உணவு தயாரிக்கும் அறை! ட்ரம்ப் பயன்படுத்தும் விமானத்தின் சிறப்பம்சங்கள்

  • Last Updated :

பறக்கும் கப்பல் என்று வர்ணிக்கப்படும் ’ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகிறார். இந்த விமானத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் விமானமே உலகின் மிகப் பிரபலமான விமானமாக விளங்குகிறது. அது அதிகாரப்பூர்வமாக ’ஏர்போர்ஸ் ஒன்’ என அழைக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 24ஆம் தேதி ட்ரம்ப் அதில்தான் வருகைதர இருக்கிறார். இந்தியா வரும்போது மட்டுமின்றி அவர் எங்கு சென்றாலும் இதில்தான் பயணம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

232 அடி நீளமுள்ள ஏர்போர்ஸ் ஒன்னின் அகலம் 195 அடிகளாகும். ஏர்போர்ஸ் ஒன் விமானத்தின் பிரமாண்டத்தை விளக்கவேண்டுமெனில் அதை ஆறு மாடி கட்டடத்தின் உயரத்துடன் ஒப்பிடலாம். அந்த விமானத்தினுள்ளே மூன்று தளங்கள் உள்ளன. பொதுவாக 4 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள போயிங் 747 - 200 B விமானமே ஏர்போர்ஸ் ஓன் விமானமாக பயன்படுத்தப்படுகிறது.

இதில் கருத்தரங்க அறை, உணவருந்தும் அறை, ஒரு மருத்துவமனை, செய்தியாளர் சந்திப்பு அறை என பல வசதிகள் உள்ளன. அதிபர் மற்றும் அதிகாரிகளுக்குத் தனி குவார்ட்டர்ஸே உள்ளது.

100 பேருக்கு உணவு தயாரிக்கும் உணவு மேடையும், விமானத்தில் இருந்து தரைக்கும், மற்ற விமானங்களுக்கும் தொடர்புகொள்ள மல்டி-ஃப்ரீகுவன்சி ரேடியோக்களும் உள்ளன.

இதிலுள்ள மின்னணு பாதுகாப்புத் தளவாடங்கள் எதிரி நாட்டு ரேடார்களைக் குழப்பி தாக்குதலில் இருந்து தப்ப உதவும். அதில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வசதியும் உள்ளது. விமானத்தின் வெளி பாகம் அணுகுண்டு தாக்குதலில் கூட சேதமடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see:

top videos

    First published:

    Tags: Donald Trump, Trump India Visit