அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் பதவிக்கான தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஜோ பைடன், கமலா ஹாரீசுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமா களமிறங்கியுள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் நடைபெற்ற காணொலி கூட்டத்தில் மிசெல் பங்கேற்று பேசினார். அப்போது அதிபர் டிரம்ப் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும் படிக்க...டிரம்ப் விமானத்தின் அருகே பறந்த டிரோன் - புலனாய்வு அமைப்புகள் விசாரணை
இந்த அதிபர் தேர்தல் நாம் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் எனத் தெரிவித்தார். டிரம்புக்கு போதுமான அவகாசம் வழங்கி விட்டதாகவும், அதிபர் பதவிக்கு தான் பொருத்தமற்றவர் என அவர் நிரூபித்துள்ளதாகவும் மிசெல் கூறினார். அமெரிக்காவில் ஊழலை ஒழிக்க பைடன்தான் சரியான தேர்வாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவில் இனவெறி அதிகரித்துள்ளதாகவும், வெறுப்புணர்வு மக்களிடம் அச்சத்தை விதைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அமெரிக்க மக்களின் காயங்களுக்கு மருந்தாக பைடன் செயல்படுவார் என்றும் மிசெல் ஒபாமா கூறினார்.
மேலும் படிக்க...தீவிரமடையும் தேர்தல் பரப்புரை... வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... டிரம்ப் தரப்பு ’அப்செட்’
இந்நிலையில் அதிபர் தேர்தல் குறித்து வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏபிசி செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பைடன் அணிக்கு 53 விழுக்காடு வாக்குகளும், டிரம்ப் அணிக்கு 41 விழுக்காடு வாக்குகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...அமெரிக்கா துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா கருத்து தெரிவிக்காதது ஏன்?
டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையிலான வித்தியாசம் இரட்டை இலக்கமாக இருக்கும் என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, USA