காஷ்மீர் விவகாரத்தில் உதவி செய்ய ட்ரம்ப் தயார் - வெள்ளை மாளிகை

காஷ்மீர் விவகாரத்தில் உதவி செய்ய ட்ரம்ப் தயார் - வெள்ளை மாளிகை
மோடி, டிரம்ப்
  • News18
  • Last Updated: August 24, 2019, 7:16 AM IST
  • Share this:
இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் உதவி செய்ய ட்ரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்ற போது செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

இந்த கருத்து இந்தியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதுடன், நாடாளுமன்றத்திலும் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. அப்போது காஷ்மீர் விவகாரத்தில் 3 வது நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது.


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டின் போது, டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த பின்னணியில் காஷ்மீர் தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் உதவி செய்ய ட்ரம்ப் தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். காஷ்மீர் விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் கூடுதல் அக்கறை செலுத்தி வருவதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Loading...

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...