• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாள் தடை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாள் தடை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் நடைமுறை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்க ஊழியர்களின் பணிப்பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள டிரம்ப் தற்காலிக வேலைகளுக்காக அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.

    2019-ஆம் ஆண்டில் 10 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையில் அவற்றில் பாதி அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு வழங்கப்பட்டது. தற்போது கிரீன் கார்டுகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டதால் பண்ணைத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள் உள்ளிட்டோருக்கு குடியேற்றமல்லாத விசா வழங்குவதில் தடை இருக்காது.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: