வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்: காவல்துறையினர் துப்பாக்கி சூடு

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்: காவல்துறையினர் துப்பாக்கி சூடு

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகையை சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதற்கு, அமெரிக்க காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

  நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 306 இடங்களில் ஜோ பைடனும், தற்போதைய அதிபர் டிரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அமெரிக்காவில் அதிபராவதற்கு எல்க்டோரெல்க் கொலேஜ் அங்கீகாரமும் அவசியமானது.

  இதன்படி, கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை ஜோ பைடன் பெற்றார். இதன் காரணமாக 270 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் பதவியை கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்தார். இந்நிலையில், தேர்தலை எதிர்த்து டிரம்ப் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது.

  ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன் வரும்பதவியேற்க இருப்பதால், தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் கூறி இருக்கிறார்.

  மேலும் படிக்க....தமிழகத்தில் 8ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

  இந்நிலையில், வெள்ளை மாளிகை நோக்கி வந்த டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். அத்துடன், கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாகிசூடு நடத்தினர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனால், வெள்ளை மாளிகையை சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட சம்பவத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

  இது குறித்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். தலைநகரில் நிகழும் குழப்பத்திற்கு யாரையும் நான் காரணமாக கூறவில்லை. நாம் பார்ப்பது சட்டவிரோதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான விரோதிகள். இது கருத்து வேறுபாடு அல்ல, இது கோளாறு. இது தேசத்துரோகத்தின் எல்லை. இப்போது அது கண்டிப்பாக முடிவடைய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

  இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கமாறும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
  Published by:Suresh V
  First published: