அமெரிக்காவில் கிரீன் கார்டுகள் வழங்குவது 60 நாட்களுக்கு நிறுத்திவைப்பு!

மாதிரிப் படம்

பொருளாதார நிலையை வைத்து, இதில் மாற்றமோ அல்லது நீட்டிப்பது குறித்தோ முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டுகள் வழங்குவதை அடுத்த 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

  அமெரிக்க ஊழியர்களின் பணிப் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளை மீண்டும் பெற வேண்டும் என்றும் அவர்கள் வாழ்வாதாரம் மீட்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த இடைநிறுத்தம் 60 நாட்களுக்கு இருக்கும் எனக் கூறியுள்ள ட்ரம்ப், அதன் பிறகு பொருளாதார நிலையை வைத்து, இதில் மாற்றமோ அல்லது நீட்டிப்பது குறித்தோ முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த உத்தரவு நிரந்தர குடியுரிமை கோரும் தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தற்காலிக வேலைகளுக்காக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: