டிரம்ப் குறித்த பரபரப்பு தகவல்கள் அடங்கிய புத்தகம் - கூறப்பட்டுள்ளது என்ன?

மறு தேர்தலில் வெற்றிபெற சீனாவின் உதவியை டிரம்ப் நாடியதாக அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் குறித்த பரபரப்பு தகவல்கள் அடங்கிய புத்தகம் - கூறப்பட்டுள்ளது என்ன?
டிரம்ப்
  • News18
  • Last Updated: June 19, 2020, 9:01 PM IST
  • Share this:
வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் மேதையான ஜான் போல்டனை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்தார். அதே ஆண்டு அப்பதவியிலிருந்து விலகினார் போல்டன். ஆனால் தனது கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லை என, போல்டனை பதவியிலிருந்து நீக்கியதாக டிரம்ப் கூறினார்.

இதனை தொடர்ந்து The Room Where it Happened" என்ற பெயரில் ஜான் போல்டன் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஜூன் 23- ஆம் தேதி புத்தகம் வெளியாக இருந்த நிலையில் நேற்று அந்த புத்தகத்திற்கு அமெரிக்க அரசு திடீரென தடை விதித்தது. அரசின் முக்கிய பதவியில் இருந்தவர் எழுதிய புத்தகம் என்பதால் அதனை தணிக்கை செய்த பின்னரே வெளியிட முடியுமென காரணமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறு தேர்தலில் தான் வெற்றி பெற சீனாவின் அதிபர் ஜின்பிங்கின் உதவியை டிரம்ப் நாடியதாக புத்தகத்தில் ஜான் போல்டன் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையை எப்படி நடத்த வேண்டும் என்பது டிரம்புக்கு தெரியாது எனவும், வெளியுறவுக் கொள்கை குறித்து அவருக்கு புரிதல் இல்லை என்றும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது ஜின்பிங்கை சந்தித்த டிரம்ப் அமெரிக்காவிலிருந்து, சோயா பீன்ஸ் கோதுமை ஆகியவற்றை அதிக அளவில் சீனா இறக்குமதி செய்ய வலியுறுத்தியதாக போல்டனின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மறு தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என டிரம்ப் கூறியதாகவும் அதற்கு ஜின்பிங் இசைவு தெரிவித்ததாகவும் The Room Where it Happened" போல்டன் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.


படிக்கசுஷாந்த் சிங் பிரிவால் தவித்து வாடும் செல்லப்பிராணி

படிக்கராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு..






அரசியல் ஆதாயத்துக்காக அதிபர் பதவியை டிரம்ப் பயன்படுத்துவதாக ஜனநாயக கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக உக்ரைனுக்கு அழுத்தம் தருவதற்காகவே அங்கிருந்த அமெரிக்க படைகளை திரும்ப பெற்றதாகவும் போல்டன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அணு ஆயுத வல்லமை பெற்ற நாடு என்ற தகவல் கூட டிரம்புக்கு தெரியாது என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்லாந்து ரஷ்யாவின் அங்கமா என ஜான் கெல்லியிடம் டிரம்ப் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீதே படையெடுக்க டிரம்ப் விரும்பியதாகவும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது ஜார்ஜ் புஷ்ஷின் முட்டாள்தனம் என அவர் விமர்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (LCARD OUT) பத்திரிகையாளர்கள் தங்களுக்கான செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்ற ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும் இல்லையென்றால் சிறை தண்டனையை அனுபவிக்கக்கூடும் என ட்ரம்ப் மிரட்டியதாகவும் ஜான் போல்டன் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

The Room Where it Happened" புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், போல்டன் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளதாகவும், மிக ரகசியமாக வைக்கப்பட வேண்டிய தகவல்களை, ஒப்புதல் பெறாமலேயே எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading