ஹோம் /நியூஸ் /உலகம் /

’தேர்தலில் ஜெயிக்க ரஷ்யா உதவியது’- அடுத்த ஒரு மணி நேரத்தில் பேச்சை மாற்றிய ட்ரம்ப்!

’தேர்தலில் ஜெயிக்க ரஷ்யா உதவியது’- அடுத்த ஒரு மணி நேரத்தில் பேச்சை மாற்றிய ட்ரம்ப்!

புடின்- ட்ரம்ப்

புடின்- ட்ரம்ப்

ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை எதிர்கட்சித் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் வெற்றி பெற ரஷ்யா உதவியதாகக் கூறிய டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ‘அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற எனக்கு ரஷ்ய உதவவில்லை’ என்று பேச்சை மாற்றியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தன்னை வெற்றி பெறச்செய்ய ரஷ்யா உதவியதாக ஒரு ட்விட்டர் கருத்தை நேற்று பதிவிட்டார். ஆனால், ட்விட்டரில் பதிவிட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே செய்தியாளர்கள் முன்னிலையில் தனக்கு ரஷ்யா உதவவில்லை என மறுப்புத் தெரிவித்தார்.

உளவுத்துறையின் கணிப்பின் அடிப்படையில் கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ட்ரம்ப் ரஷ்யாவின் உதவியால் மட்டுமே வென்றார் என்று கூறப்படுகிறது. ஆனால், தான் முற்றிலும் நேர்மையான முறையிலேயே வெற்றி பெற்றதாக ட்ரம்ப் இதுநாள் வரையில் விளக்கமளித்து வருகிறார்.

ஆனால், ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை எதிர்கட்சித் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். ஜனநாயகக் கட்சியின் எலிசபெத் வாரன் கூறுகையில், “தற்போது ட்ரம்ப் மட்டும் அமெரிக்க அதிபர் பதவியில் இல்லாவிட்டால் அவர் கைகளில் கைவிலங்கை பூட்டியிருப்பார்கள்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மேலும் பார்க்க: லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வடகொரியாவில் வாழ முடியும்- ஐ.நா

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump