அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதனை தன் பதவிக்காலத்தில் சீனா வைரஸ் என்று பெயரிட்டது கடும் சர்ச்சைக்குள்ளானது. மேலும் ட்ரம்ப், உலகச் சுகாதார அமைப்பு சீனாவின் தகிடுத்தத்தங்களை மூடி மறைக்கிறது என்று அதற்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவிப்பும் வெளியிட்டார்.
இப்போது தோல்விக்குப் பிறகு மீண்டும் வாய் திறந்த டொனால்டு டிரம்ப், “இப்போது அனைவரும், ஏன் பகைவர் முகாமிலும் கூட சீனா வைரஸ் வூகான் லேபிலிருந்து வெளியே கசிந்தது என்ற எனது கூற்றை ஆதரிக்கின்றனர்.
டாக்டர் ஃபாசிக்கும் சீனாவுக்கும் இடையேயான பரிமாற்றங்களும் இதை உறுதி செய்கின்றன, இதைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு உரத்த குரலில் தற்போது சீனாதான் காரணம் என்று அனைவரும் கூறத்தொடங்கியுள்ளனர்.
சீனா, அமேரிக்காவுக்கு நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும். உலகிற்கும் சீனா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், 10 ட்ரில்லியன் டாலர்கள் சீனா கொடுக்க வேண்டும்” என்றார் முன்னாள் அதிபர் ட்ரம்ப்.
Also Read:
கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மருமகள்- குவியும் பாராட்டு
அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஃபாசிக்கும் சீனாவின் வூகான் லேபிற்கும் இடையே நடந்த 3,000 மின்னஞ்சல் பரிமாற்றங்கள் வாஷிங்டன் போஸ்ட் செய்தி ஊடகத்தின் கையில் கிடைத்துள்ளது, பஸ்ஃபீடு மற்றும் சிஎன்என் ஆகியவையும் தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் இந்த இ-மெயில்களைப் பெற்றுள்ளது.
Also Read:
கையெறி குண்டை வைத்து விளையாடிய 3 குழந்தைகள் பலி: பாகிஸ்தானில் பயங்கரம்
ஆனால் டாக்டர் ஃபாசி சீனா வூகான் லேப் கொரோனா கசிவு கோட்பாட்டை மறுத்த போது, “சீனா தன் மக்களுக்கும் உலகிற்கும் ஒரு சேர உலைவைக்கும் வைரஸை உருவாக்கி கசிய விட்டிருப்பார்கள் என்பது பாரதூரமான ஒரு முடிவு, அப்படியிருக்க வாய்ப்பில்லை” என்று இந்த சீனா வைரஸ் கோட்பாட்டை ஏற்கெனவே மறுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் இப்போது மீண்டும் இந்த சீனா வைரஸ் கோட்பாடு தலைத்தூக்கியுள்ளது. இதற்கிடையே டாக்டர் ஃபாசிக்கும் சீனாவின் வூகான் வைரஸ் லேபிற்கும் இடையேயான நிதிப்போக்குவரத்து தொடர்பாகவும் சில கோட்பாடுகள் உலவி வருகின்றன. இந்நிலையில்தான் ‘நான் தான் அப்பவே சொன்னேனே’ என்று டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.