ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும் - ட்ரம்ப் உறுதி

அமெரிக்காவில் ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் தயாராகிவிடும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும் - ட்ரம்ப் உறுதி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 3:00 PM IST
  • Share this:
உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளிலும், உயிரிழப்பு அதிமுள்ள நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருந்துவருகிறது. இதுவரையில், அமெரிக்காவில் 66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் 1,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துவருகின்றனர்.

இந்தநிலையில், கேள்வி பதில் நேரத்தில் வாக்காளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ‘கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நாம் நெருங்கிவிட்டோம். இன்னும் ஒரு மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்’ என்று தெரிவித்தார்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading