முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை புத்திசாலி என்று அழைத்தார் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு அமெரிக்காவின் எதிர்வினையை விமர்சனம் செய்தார் ட்ரம்ப்.
அதாவது, $2 மதிப்புள்ள பொருளாதாரத் தடைகளுக்காக அவர் ஒரு நாட்டைக் கைப்பற்றுகிறார். புதினை நான் மிகவும் புத்திசாலி என்று கூறுவேன்,” என்று புதன்கிழமை இரவு புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் நிதி திரட்டும் போது ட்ரம்ப் கூறினார்,
மேலும் தான் அதிபராக நீடித்திருந்தால் புதின் படையெடுத்திருக்க மாட்டார் என்கிறார் ட்ரம்ப். புதன்கிழமை இரவு Fox News உடனான தொலைபேசி நேர்காணலில், ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியபோது, முன்னாள் அதிபர் ட்ரம்ப் நடைபெற்று வரும் போரை "உலகிற்கும் நாட்டிற்கும் மிகவும் சோகமான விஷயம்" என்று அழைத்தார்.
புதினை படையெடுப்பதில் இருந்து தடுக்க பைடன்போதுமான அளவு முயற்சி செய்யவில்லை என்றார் ட்ரம்ப்.
மேலும், “தற்போது போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. புதின் தனக்கு என்ன வேண்டுமோ அதை தற்போது பெறுவது மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலை உயர்வதால் மேலும் பணக்காரராகிக்கொண்டிருக்கிறார்” என்று ஒரு புதிய பார்வையை வெளியிட்டார் ட்ரம்ப்.
செவ்வாயன்று "கிளே டிராவிஸ் & பக் செக்ஸ்டன் ஷோ" உடனான வானொலி நேர்காணலில் புதினை "புத்திசாலி" என்று ட்ரம்ப் அழைத்தார், உக்ரைனுக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய உரையை வழங்கிய பின்னர். "இவர் மேதை" என்றேன். உக்ரைனின் பெரும்பகுதியை புதின் சுதந்திரமானது எனஅறிவிக்கிறார். ஆஹா அற்புதம். நான் சொன்னேன், 'அவர் எவ்வளவு புத்திசாலி?' அவர் உள்ளே சென்று அமைதி காக்கும் பணியாளராக இருக்கப் போகிறார்." என்று ட்ரம்ப் உக்ரைன்- ரஷ்யப் போரை அமெரிக்க அதிபர் பைடனின் தோல்வி எனுமாறு அரசியல் தொனியில் கிண்டல் தொனியில் பேசி வருகிறார்.
இந்த வார தொடக்கத்தில், "விளாடிமிர் புதின் ஒரு ஆக்கிரமிப்பாளர். உக்ரேனியர்கள் பலியாகின்றனர்" என்று ட்வீட் செய்த ட்ரம்ப் நிர்வாக அமைச்சராக இருண்டஹ் மைக் பாம்பியோ தொலைக்காட்சி நேர்காணல்களிலும், ட்விட்டரிலும் ரஷ்யாவுடனான ட்ரம்பின் அணுகுமுறை வெற்றியடைந்ததாக வாதிட்டார். "விளாடிமிர் புதின் எங்கள் நிர்வாகத்தின் போது இருந்த அதே நபர். அமெரிக்க தலைமை மட்டுமே மாறிவிட்டது," என்று அவர் கூறினார்.
உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள
உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288
மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
வலைதளம் :
https://nrtamils.tn.gov.in
Facebook :
https://www.facebook.com/nrtchennai1038
Twitter : @
tamiliansNRT
மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்:
1800118797 (Toll free)
+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.