மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்..

மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்..

அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

  வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த டிரம்பை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகைக்கு அவர் புறப்பட்டு சென்றார்.

  வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஒருவாரம் வரை ஓய்வில் இருப்பார் என தெரிகிறது. முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

  தனது நிர்வாகத்தின் கீழ் கொரோனாவுக்கு எதிராக சிறப்பான மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சைக்கு பின் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை போன்ற உடல்நிலையை உணர்வதாகவும் பதிவிட்டுள்ளார்.  Also read... மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு- மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு

  அதிபர் மீண்டும் தேர்தல் பிரச்சார களத்திற்கு வந்துவிட்டால், வெல்ல முடியாத நபராக திகழ்வார் என்றும், ஜனநாயக கட்சியினரின் தந்திரம் மட்டுமின்றி சீன வைரஸால் கூட அதிபரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்
  Published by:Vinothini Aandisamy
  First published: