ஹோம் /நியூஸ் /உலகம் /

இங்கிலாந்தில் டிரம்ப்... பிரெக்சிட்-க்கு பிறகான வர்த்தக நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை!

இங்கிலாந்தில் டிரம்ப்... பிரெக்சிட்-க்கு பிறகான வர்த்தக நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை!

டிரம்ப்

டிரம்ப்

இங்கிலாந்துக்கு டிரம்ப் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்காணோர் ஒன்று கூடி முழக்கமிட்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மூன்று நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-வை சந்தித்து பேசினார்.

அமெரிக்கா - இங்கிலாந்து நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், ஹவாய் செல்போன்கள் பயன்படுத்துவது தொடர்பாகவும், பிரெக்சிட் ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்து பிரிந்து சென்றால் அதன் பிறகான வர்த்தகம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதனிடையே இங்கிலாந்துக்கு டிரம்ப் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்காணோர், டிரஃபல்கர் சதுக்கம் அருகே திரண்டு டிரம்ப்-க்கு எதிராக முழக்கமிட்டனர்.

இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக சண்டே டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்து இருந்த டொனால்டு டிரம்ப், ”5ஜி சேவைக்காக ஹூவாய் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இங்கிலாந்து கவனமாக இருக்க வேண்டும்.

ஹூவாய்க்கு மாற்றாக வேறு தயாரிப்புகளை பயன்படுத்தலாம், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

மேலும் பார்க்க:

Published by:Tamilarasu J
First published:

Tags: BREXIT, Donald Trump