• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சிரியாவில் இருந்து வெளியேறுகிறதா அமெரிக்கப் படைகள்?

சிரியாவில் இருந்து வெளியேறுகிறதா அமெரிக்கப் படைகள்?

சிரியாவில் அமெரிக்கப்படைகள்

சிரியாவில் அமெரிக்கப்படைகள்

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டு விட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்கப் படைகள், விரைவில் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு தலையெடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் வசம் கொண்டுவந்து ஆட்சி செய்து வந்தனர். அங்குள்ள மக்கள் மீது கடுமையான ஆட்சியை கட்டவிழ்த்து விடப்பட்டது.

சிரியாவின் மற்றொரு இனக்குழுவான குர்துப் போராளிகள் மற்றும் சிரிய ஜனநாயகப் படையினர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கப் படையினர் ஐ.எஸ். குழுவினரை ஒழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்டனர். எனினும், இன்னும் சுமார் 14 ஆயிரம் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில இடங்களில் சண்டை நடந்தும் வருகிறது.

இந்நிலையில், சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டு விட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். மேலும், இன்னும் சில மாதங்களில் சிரியாவில் இருந்து அமெரிக்கப்படைகள் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

எனினும், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை.

சிரியாவில் அரசுப்படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் இருந்து வந்த நிலையில், கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்கப்படைகள் சண்டையிட்டன. எனினும், தற்போது அமைதிப்பேச்சுவார்த்தை நடந்து வருவதால் அங்கு தற்போதைக்கு அமைதி நிலவி வருகிறது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: