• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு..!

அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு..!

சோலிமானி (AP)

சோலிமானி (AP)

Trump Ordered Killing of Iran Guards Commander Qasem Soleimani |

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்கப் படைகள் பாக்தாத் விமான நிலையத்தில் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ புரட்சி பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சோலிமானி, உளவுப்பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன.

    இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

    சமீபத்தில் நடந்த அமெரிக்க தூதரக தாக்குதலை இந்த ராணுவக்குழு நடத்தியதாக அமெரிக்கா கூறி வந்தது.

    ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில், அமெரிக்கர்களின் நலனை காக்கும் வகையில், அதிபர் ட்ரம்ப் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.



    இதில், காசிம் சுலைமானி, அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த சுலைமானி திட்டமிட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வந்த நிலையில், இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான புது மோதலுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் ஒன்றினையும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்க புள்ளியாக இருக்கும் என்றும் சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: