ஹோம் /நியூஸ் /உலகம் /

வடகொரிய அதிபர் கிம் ஜாங் இருக்கும் இடம் தெரியும் - தென்கொரிய அமைச்சர் தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் இருக்கும் இடம் தெரியும் - தென்கொரிய அமைச்சர் தகவல்

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்னின் இருப்பிடம் குறித்து தென்கொரிய அரசு அறிந்துவைத்துள்ளதாக தென்கொரிய அமைச்சர் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து தனக்கு தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில், கிம் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், கிம் நலமுடன் இருப்பதாகவும் இதுகுறித்து விரைவில் உலகிற்குத் தெரியவரும் என்றும் கூறினார். மேலும், இதுபற்றி பேச முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

  இதனிடையே தென்கொரிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அந்நாட்டு அமைச்சர் கிம் யியான் சுல், கிம் ஜாங் உன்னின் இருப்பிடம் குறித்து தென்கொரிய அரசு அறிந்துவைத்துள்ளதாகத் தெரிவித்தார். கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என தகவல்கள் உலா வந்த நிலையில், அவர் இருக்கும் இடம் தெரியும் என அமெரிக்காவும், தென்கொரியாவும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Also see:

  Published by:Rizwan
  First published:

  Tags: Donald Trump, Kim jong un, North and south korea