ஹோம் /நியூஸ் /உலகம் /

'அமெரிக்காவின் மறுபிரவேசம்'.. தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப்! ஆதரவாளர்கள் முன்னிலையில் மாஸ் ஸ்பீச்!

'அமெரிக்காவின் மறுபிரவேசம்'.. தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப்! ஆதரவாளர்கள் முன்னிலையில் மாஸ் ஸ்பீச்!

ட்ரம்ப்

ட்ரம்ப்

டிரம்ப் 2020 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடனிடம் இரண்டு முறை பிரதிநிதிகள் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அதிபர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யம் 2024 ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் வேட்புமனு மற்றும் பிரச்சார அறிக்கைகளுக்கான பேப்பர் வேலைகள் நிறைவுற்றதாக அறிவித்துள்ளார்.

  இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமான இடங்களைப் பெறத் தவறிவிட்டனர். அதன் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை புளோரிடாவில் உள்ள அவரது மார்-அ -லாகோ தோட்டத்தில், டொனால்ட் டிரம்ப் இதை அறிவித்தார்.

  "அமெரிக்காவை மீண்டும் சிறந்து விளங்கச் செய்வதற்காக, அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இன்றிரவு அறிவிக்கிறேன்,. அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது" என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

  இதையும் படிங்க:ரூ.2கோடிக்கு ஒரு கிராமம்.. மொத்த ஊரையே விலைக்கு வாங்கிய நபர்!

  76 வயதான ட்ரம்பின் உரைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, 2024 வெள்ளை மாளிகை ஆளும் நிற்பர் தேர்தலுக்கான ஆவணங்களை ட்ரம்பின் உதவியாளர்கள் அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர்.

  2019 ஆம் ஆண்டில், ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஹவுஸ் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் காங்கிரஸைத் தடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவரை பதவி நீக்கம் செய்தது. ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிடென் மற்றும் அவரது மகனை விசாரிக்குமாறு உக்ரைன் தலைவருக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்தார். அதன் பின்னர் அவர் செனட்டால் நீக்கப்பட்டார்.

  டிரம்ப் 2020 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடனிடம் இரண்டு முறை பிரதிநிதிகள் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அதிபர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

  இதையும் படிங்க: போலந்து கிராமத்துக்குள் பாய்ந்த ரஷ்ய ஏவுகணை.. இருவர் மரணம்.. நேட்டோ அவசர ஆலோசனை!

  ட்ரம்பின் உயர்மட்ட உதவியாளரும் நீண்ட கால ஆலோசகருமான ஜேசன் மில்லர், "அதிபர் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக செவ்வாய்கிழமை அறிவிக்கப் போகிறார். மேலும் இது தொழில்முறை, மிக பெரிய அறிவிப்பாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.

  மில்லர் 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டிரம்பிற்காக பிரச்சாரம் செய்து பணிபுரிந்தார் என்பதும், ஜனாதிபதி பதவிக்குப் பிறகும் அவருக்கு ஆலோசகராகத் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Donald Trump, USA