முகப்பு /செய்தி /உலகம் / கிம் ஜாங் உன்னிற்கு Air Force One விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பிய டொனால்ட் ட்ரம்ப்!

கிம் ஜாங் உன்னிற்கு Air Force One விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பிய டொனால்ட் ட்ரம்ப்!

கிங் ஜாங் உடன் ட்ரம்ப் சந்திப்பு

கிங் ஜாங் உடன் ட்ரம்ப் சந்திப்பு

கிம் ஜாங் உன்னை Air Force One-ல் ஏற்றி வட கொரியாவில் இறக்கி விடுவதற்கு முன்வந்ததன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் "மிகவும் அனுபவமுள்ள இராஜதந்திரிகளைக் கூட திகைக்க வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் லிஃப்ட் கொடுக்க முன்வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபராக இருந்த போது டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹனோய் நகரில் நடந்த ஒரு உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் லிஃப்ட் கொடுக்க முன்வந்ததாக பிபிசி ஆவணப்படம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளையும், வல்லரசு நாடுகளுக்குமே சவால் விட்டு வரும் தேசமாக விளங்குகிறது வட கொரியா. இதன் காரணமாக பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் சளைக்காமல் உலக நாடுகளுக்கு போக்கு காட்டி வருகிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங். அப்பேர்பட்ட கிங் ஜாங் உன்னை நேரில் சந்தித்து அணு ஆயுதங்களை கைவிடும்படி 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் இருமுறை சந்தித்து பேசினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 2018ல் சிங்கப்பூரிலும், 2019ம் ஆண்டு வியட்நாம் தலைநகர் ஹானோயிலும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் 2019ம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பிறகு அதிபர் கிம் ஜாங் உன்னை வட கொரியாவில் இறக்கி விடுவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக பிபிசி ஆவணப் படத்தின் மூலம் தெரியவந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான Air Force One-ல் ட்ரம்ப் சென்றிருந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம்மோ, சீனா வழியாக 60 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து வியட்நாமை அடைந்தார். விமானத்தில் ஈஸியாக வியட்நாம் சென்றிருக்க முடியும் என்றாலும் அவர் தனது தந்தையின் வழியை பின்பற்றி ரயில் மூலமாக வியட்நாம் சென்றதாக கூறப்படுகிறது.

கிங் ஜாங் உடன் ட்ரம்ப் சந்திப்பு

"Trump Takes on the World" என்ற தலைப்பிலான பிபிசியின் ஆவணப் படத்தில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கிம் ஜாங் உன்னை Air Force One-ல் ஏற்றி வட கொரியாவில் இறக்கி விடுவதற்கு முன்வந்ததன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் "மிகவும் அனுபவமுள்ள இராஜதந்திரிகளைக் கூட திகைக்க வைத்தார். இருப்பினும் ட்ரம்பின் கோரிக்கையை கிம் ஜாங் உன் ஏற்கவில்லை. அவர் ரயிலில் செல்லவே விரும்பினார்.

ஒரு வேளை கிம் ஜாங் உன், ட்ரம்பின் கோரிக்கையை ஏற்றிருந்தால் அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் ஏறி வட கொரியாவுக்கு சென்றிருப்பார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அந்த விமானம் வட கொரிய எல்லைக்குள் பயணிக்க வேண்டியதிருந்திருக்கும், அது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு கிம் ஜாங் உன், சீன விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் தன்னுடைய 1.5 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான "The Beast" என்றழைக்கப்படும் காடிலாக் காருக்குள் கிம் ஜாங்கை ஏற்றி அது பற்றி விளக்கிக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Donald Trump, Kim jong un