ஹோம் /நியூஸ் /உலகம் /

இரண்டாம் முறையாக சந்திக்கின்றனர் டிரம்ப் - கிம்...!

இரண்டாம் முறையாக சந்திக்கின்றனர் டிரம்ப் - கிம்...!

ட்ரம்ப்-கிம்

ட்ரம்ப்-கிம்

வரலாற்றில் முதன் முறையாக சிங்கப்பூரில் கடந்த 2018-ம் ஆண்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு நடைபெற்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் 2-வது சந்திப்பு வரும் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக சிங்கப்பூரில் கடந்த 2018-ம் ஆண்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு நடைபெற்றது. வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பான இந்தச் சந்திப்பு உலக அளவில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் சந்தித்து உரையாடுவது தொடர்பாக வட கொரியா பேச்சுவார்த்தைக்குழு தலைவர் கிம் யாங் சோல் வாஷிங்டனில் டிரம்பை சந்தித்துப் பேசினார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு பிப்ரவரியில் இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் சந்திப்பார்கள் என்றும் சந்திக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை மாளிகை பதிவிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க உள்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோவையும் கிம் யாங் சோல் சந்தித்து உரையாடினார்.

Also see... 10% இடஒதுக்கீடு: தமிழகம் தனிமைப்படுகிறதா?

Published by:Vaijayanthi S
First published:

Tags: Donald Trump, Kim jong un