• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அதிபராக பதவி ஏற்கும் ஜோ பைடன்! - வாஷிங்டனை விட்டு வெளியேறும் ட்ரம்ப்

அதிபராக பதவி ஏற்கும் ஜோ பைடன்! - வாஷிங்டனை விட்டு வெளியேறும் ட்ரம்ப்

ஜோ பைடன் - ட்ரம்ப்

ஜோ பைடன் - ட்ரம்ப்

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மைக் பென்ஸ் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

  • Share this:
    அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபர் பதவிக்கு அதே கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மைக் பென்ஸ் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்தனர். எனினும், ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாததால் குழப்பம் நிலவி வந்தது.

    ட்ரம்பும் தனது சமூக வலைதள பக்கங்களில் வன்முறைகளை தூண்டும் விதமான பதிவுகளை இட்டு வந்தார். இதனையடுத்து, ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் ட்ரம்புக்கு எதிரான பதிவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபர் மீது இரண்டு முறை பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, ட்ரம்புக்கு எதிராகதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், ஜோ பைடன் அரும் 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது மட்டுமல்லாது வாஷிங்டனில் இருந்தே வெளியேற உள்ளதாக ட்ரம்பின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஃபுளோரிடாவில் உள்ள மார் எ லகோ (Mar-a-Lago) என்ற தனது வீட்டில் அவர் சென்று தனது குடும்பத்தினருடன் தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளை மாளிகையைச் சேர்ந்த உதவியாளர்கள் சிலர் அவருக்காக பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: