டொனால்ட் ட்ரம்ப் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட ஜூனியர் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட ஜூனியர் ட்ரம்ப்
ட்ரம்ப் ஜூனியர் மற்றும் கிம்பெர்லி
  • Share this:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகனின் காதலி கிம்பெர்லி கில்ஃபோய்லேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவின் மிகக் கடுமையாக இருந்துவருகிறது. குறிப்பாக உலக அளவில் அமெரிக்காவில் கொரோனா மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில், அமெரிக்காவில் மட்டும் 28,91,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,32,114 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் காதலி கிம்பெர்லி ககில்ஃபோய்லேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி ஏதும் இல்லாத நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் மீண்டும் கொரோனா சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளது.


இருப்பினும், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், அவரும் தற்போது தானாக தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். அவர் பங்கேற்கவிருந்த பொதுநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading