’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையேயான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..
ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 9:30 AM IST
  • Share this:
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்புக்கும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி காரசாரமாக நடைபெற்று வருகிறது. கொரோனாவால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா பரவலை கையாள அதிபர் டிரம்புக்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என்று குற்றம் சாட்டிய பைடன், டிரம்ப் ஒரு பொய்யர் என்று கூறினார். இதனால் கோபமடைந்த டிரம்ப், இந்த கோமாளி எதைப்பற்றி பேசுகிறார் என உங்களுக்குப் புரிகிறதா என்று கேள்வி எழுப்பினார். கொரோனாவை சமாளிக்க கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தலாம் என்று கூறியவர் டிரம்ப் என ஜோ பைடன் சுட்டிக்காட்ட, அது கிண்டலுக்காக சொல்லப்பட்டது என்று டிரம்ப் பதிலளித்தார்.

மேலும் படிக்க.. டிக் டாக்: டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை. விரைவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்க அறிவுறுத்தல்

முகக்கவசம் அணிவது கொரோனா பரவலைக் குறைக்கும் என தொற்றுநோய்த் தடுப்பு இயக்குனர் வலியுறுத்தியுள்ளபோதும், டிரம்ப் ஏன் அதனை அணிவதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் வைத்திருந்த மாஸ்க்கை எடுத்துக் காட்டிய டிரம்ப் தேவைப்படும்போது அதனை அணிந்துகொள்வதாக கூறினார்.


ட்ரம்ப்-பைடன் விவாதம்


மேலும் படிக்க.. அதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..விவாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆமி கோனி பாரெட் நியமிக்கப்பட்டது குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அப்போது கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றதால் பாரெட்டை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதாக டிரம்ப் கூறினார். வரும் தேர்தலில் வெற்றி பெறுபவரே நீதிபதியை நியமித்திருக்க வேண்டும் என்று ஜோ பைடன் சொல்ல, தான் நான்கு ஆண்டுகளுக்கு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு அல்ல என்றும் காட்டமாக பதிலளித்தார் டிரம்ப். இவ்வாறு அமெரிக்காவில் விவாதம் நடைபெற்று வருகிறது.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading