Home /News /international /

தோல்வியில் முடிந்த ட்ரம்ப்- கிம் சந்திப்பு!

தோல்வியில் முடிந்த ட்ரம்ப்- கிம் சந்திப்பு!

 (Image: Reuters)

(Image: Reuters)

Trump Kim Summit | நேற்றைய சந்திப்பு தோல்வியில் நிறைவடைந்தை அடுத்து வடகொரியாவின் பொருளாதார நிலைப்பாடு பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
வியட்நாமில் நடந்த ட்ரம்ப்- கிம் சந்திப்பில் ஒப்பந்தம் ஏதும் கையெழுத்து ஆகாததால் தோல்வியில் நிறைவடைந்தது.

வியட்நாமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஆகியோரின் சந்திப்புக் கூட்டம் நடந்துள்ளது. நேற்று அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்து இடுவதாக இருந்த கூட்டம் எவ்வித ஒப்பந்தமும் இல்லாமலே நிறைவடைந்துள்ளது.

அணு ஆயுத ஒழிப்பு மூலம் அமெரிக்கா- வடகொரியா இடையே உறவு மேம்படும் என இரு நாட்டு அதிபர்களும் நேற்றைய சந்திப்புக்கு ஒப்புதல் அளித்து சந்தித்துக் கொண்டனர்.

வியட்நாமின் ஹனோய் பகுதியில் நடந்த இந்த சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் அணு ஆயுத ஒழிப்பு மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் குறித்து விவாதித்தனர் என வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் எவ்வித ஒப்பந்த முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், விரைவில் இரு நாட்டுத் தலைவர்களும் மற்றொரு சந்திப்பில் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பு தோல்வியில் நிறைவடைந்தை அடுத்து வடகொரியாவின் பொருளாதார நிலைப்பாடு பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: அணு ஆயுத ஒழிப்பு... டிரம்ப்-கிம் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை
Published by:Rahini M
First published:

Tags: Donald Trump, Kim jong un

அடுத்த செய்தி