பதவியை தவறாக பயன்படுத்திய விவகாரம்! 4-ம் தேதி ட்ரம்ப் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

பதவியை தவறாக பயன்படுத்திய விவகாரம்! 4-ம் தேதி ட்ரம்ப் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ட்ரம்ப் (Image: Reuters)
  • News18
  • Last Updated: November 27, 2019, 10:38 PM IST
  • Share this:
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணைக்கு வரும் 4-ம் தேதி ஆஜராக வேண்டும் என அந்நாட்டு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹன்டார் உக்ரைன் நாட்டில் நடத்தி வரும் தொழில் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் விசாரணை நடத்தாவிட்டால், உக்ரைன் நாட்டுக்கான பயங்கரவாத தடுப்பு நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டிய ஜனநாயக கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணைக்கு, டிரம்ப் வரும் 4-ம் தேதி ஆஜராகலாம் என, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜெரால்ட் நட்லர் கூறியுள்ளார். அன்றைய தினத்தை, சாட்சிகளை விசாரிக்க டிரம்ப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் நட்லர் தெரிவித்துள்ளார்.


Also see:

First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்