Home /News /international /

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் வெளியாகும் - அதிபர் டிரம்ப்

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் வெளியாகும் - அதிபர் டிரம்ப்

ட்ரம்ப்

ட்ரம்ப்

  • News18
  • Last Updated :
    கொரோனாவுக்கான தடுப்பு மருந்து விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில், அந்நாட்டில் உருவாகி வரும் தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை குறித்து ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா மருந்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் லாபம் ஈட்டிவருவதாக விமர்சித்தார்.



    Also read... ஜப்பானை சேதப்படுத்தி வரும் ஹைஷென் சூறாவளி - 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

    அமெரிக்காவில் தயாராகி வரும் தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியளித்த டிரம்ப், விரைவில் உலக மக்களுக்கு நல்ல செய்தி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Donald Trump

    அடுத்த செய்தி