ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டால் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறத் தயார் - டிரம்ப்

ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டால் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறத் தயார் - டிரம்ப்

டிரம்ப் - பைடன்

செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தல் பிரதிநிதிகள் மூலம் ஜோ பைடன் தேர்வுசெய்யப்பட்டால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தேர்வுசெய்யப்பட்டால், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். 270 தேர்தல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 306 வாக்குகளையும், டிரம்ப் 232 வாக்குகளையும் பெற்றனர்.

    இந்தத் தேர்தலில் மிகப்பெரும் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதிகளின் கூட்டம், வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது புதிய அதிபர் தேர்வுசெய்யப்பட உள்ளார்.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தல் பிரதிநிதிகள் மூலம் ஜோ பைடன் தேர்வுசெய்யப்பட்டால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகக் கூறினார். எனினும், பைடன் தேர்வுசெய்யப்பட்டால் அது மிகப்பெரும் தவறு என்று டிரம்ப் கூறினார்.

    Also read... அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி தயாராக இருக்கும்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..

    புதிய அதிபர் பதவியேற்கும் ஜனவரி 20-ம் தேதிக்குள் மிகப்பெரும் சம்பவங்கள் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். மிகப்பெரும் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் கூறினார்.

    முன்னதாக, அமெரிக்கப் படையினர் மத்தியில் பேசிய அவர், கொரோனா தடுப்பு மருந்து விநியோகப் பணிகள், அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று தெரிவித்தார். முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.





    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: