முகப்பு /செய்தி /உலகம் / கொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..

கொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

கொரோனாவை கட்டுப்படுத்த டிரம்ப் அரசு முற்றிலும் தவறிவிட்டதாக, அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க...ஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்: 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..

இதனைதொடர்ந்து, ஜோ பிடனுடன் தனது முதல் பரப்புரை முன்னோட்டத்தில் கலந்துகொண்ட கமலா ஹாரிஸ், முதற்கட்டமாக கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த டிரம்ப் அரசு தவறிவிட்டதாகவும் கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.

First published:

Tags: CoronaVirus, Donald Trump, Kamala Harris, President Donald Trump, Racism