முகப்பு /செய்தி /உலகம் / வியப்பை ஏற்படுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உணவு பழக்க வழக்கங்கள்!

வியப்பை ஏற்படுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உணவு பழக்க வழக்கங்கள்!

  • Last Updated :

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக காலை உணவு உண்ணும் பழக்கம் இல்லாத ட்ரம்ப், வெண்பன்றி இறைச்சியை முட்டையுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.

டீ, காஃபி மட்டுமின்றி மது அருந்தும் பழக்கமும் இல்லாதவர். தன் வாழ்க்கையில் ஒரு முறை கூட மது அருந்தியது கிடையாது எனக் கூறும் ட்ரம்ப், தனக்கு மது அருந்துபவர்களையும் பிடிக்காது என்பார்.

மது அருந்தும் பழக்கமில்லாத ட்ரம்ப், டயட் கோக்கை விரும்பி அருந்துவார். ஒரு நாளில் ட்ரம்ப் 12 டயட் கோக் பாட்டில்களை கூட பருகுவார் என தகவல்கள் உண்டு.

பீட்சா, சாக்லேட் மில்க் ஷேக், கடல் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவையும் ட்ரம்பின் விருப்பப்பட்டியலில் உள்ள உணவுகளாகும்.

ட்ரம்ப் இந்திய வருகை தொடர்பான அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்...

top videos

    First published:

    Tags: Trump India Visit