பாதுகாப்புத்துறை செயலாளரை பதவி நீக்கம் செய்தார் டிரம்ப்..

பாதுகாப்புத்துறை செயலாளரை பதவி நீக்கம் செய்தார் டிரம்ப்..

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்காவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 • Share this:
  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போதைய அதிபர் டிரம்பின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20-ம் தேதியுடன் நிறைவுக்கு வர உள்ளது. இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம் செய்து விட்டதாகவும், அவருக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் கிறிஸ்டோபர் மில்லர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

  அண்மையில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றது உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்க மத்திய படையை அனுப்பவது தொடர்பாக அதிபர் டிரம்புக்கும், மார்க் எஸ்பருக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது.  இந்த சூழ்நிலைகளுக்கு இடையே, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனிடம் அதிகாரத்தை பகிர்வதற்கான கோப்புகளில் கையெழுத்திட டிரம்ப் நிர்வாகம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
  Published by:Rizwan
  First published: