HOME»NEWS»INTERNATIONAL»trump departs white house for final time will skip bidens inauguration aru

வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியுடன் வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப் - கடைசியாக பேசியது என்ன?

ட்ரம்புக்கு சொந்தமாக ஃபுளோரிடாவிலுள்ள Mar-a-Lago எனும் ரிசார்டுக்கு அவர் மனைவியுடன் சென்று தங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன.

வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியுடன் வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப் - கடைசியாக பேசியது என்ன?
ட்ரம்புக்கு சொந்தமாக ஃபுளோரிடாவிலுள்ள Mar-a-Lago எனும் ரிசார்டுக்கு அவர் மனைவியுடன் சென்று தங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன.
  • Share this:

அமெரிக்காவில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த களேபரங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்காத டொனால்ட் ட்ரம்ப் (வயது 74) அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதும், வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடியது, வெள்ளை மாளிகையினுள் அத்துமீறி நுழைந்து துவம்சம் செய்ததும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும், அதிபரை பதவி நீக்க நடத்தப்பட்ட முயற்சிகள் என த்ரில்லர் படக் காட்சிகளாக அரங்கேறி வந்தன. இது அமெரிக்க வரலாற்றில் முதல் முறை சம்பவங்களாகவும் அமைந்தன.

இந்நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் பதவியேற்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ஆகியோர் வெளியேறினர். அதிபரின் அதிகாரப்பூர்வ ஹெலிகாப்டரான ‘மெரைன் ஒன்’ மூலம் அருகில் உள்ள Joint Base Andrews எனும் ராணுவ விமானப்படைத்தளத்திற்கு பயணமானார். அங்கிருந்து ‘ஃபோர்ஸ் ஒன்’ விமானம் மூலம் இருவரும் ஃபுளோரிடாவுக்கு செல்கின்றனர்.





வெள்ளை மாளிகையில் இருந்து புறப்படும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் பேசுகையில், “அற்புதமான நான்கு ஆண்டுகள், வாழ்நாளின் மரியாதை, நான் விடைபெற  விரும்புகிறேன்” என சிம்பிளாக பேசிவிட்டு புறப்பட்டார் ட்ரம்ப்.

ட்ரம்புக்கு சொந்தமாக ஃபுளோரிடாவிலுள்ள Mar-a-Lago எனும் ரிசார்டுக்கு அவர் மனைவியுடன் சென்று தங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன.

இதன் மூலம் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் அவர் கலந்துகொள்ளப்போவதில்லை என்பது உறுதியானது. பொதுவாகவே அதிபர் பதவியேற்பு விழாவில் முந்தைய அதிபர் கலந்துகொள்ளுவது என்பது அமெரிக்க வரலாற்றில் மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த 150 ஆண்டுகளுக்கும் மேலான மரபை ட்ரம்ப் தற்போது தகர்த்துள்ளார்.

இதனிடையே Joint Base Andrews ராணுவ படைத்தளத்தில் ட்ரம்புக்கு பிரியா விடை அளிக்கப்பட உள்ளது. 21 குண்டுகள் முழங்க ட்ரம்புக்கு மரியாதை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.



இதனிடையே வெள்ளை மாளிகையின் மேற்கு நுழைவாயில் பகுதியில் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பைடனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதே போல உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சோனியா சோடோமேயர் என்பவர் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: