அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறவேறிய ராணுவப் பட்ஜெட்டுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளிக்க மறுத்ததால் அங்கு கடும் கண்டனங்கள் அவர் மீது எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வென்று வரும் ஜனவரி 20ம் தேதி அவர் பதவியேற்கிறார். ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார்.
இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான 55 லட்சம் கோடி ரூபாய்க்கான ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் நிறைவேறியது. ஆனால் டிரம்ப் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார்.
இதற்கான மறுப்பை வெளியிட்ட டிரம்ப் கூறியதாவது:
இந்த மசோதாவின் 230ம் பிரிவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. ராணுவ மையங்களின் பெயர்களை மாற்றுவது, அவசரகால முடிவெடுக்க அதிபருக்கு அதிகாரம் இல்லாதது என்று சர்ச்சைக்குரிய வகையில் இந்த மசோதா உள்ளது.
அதே போல் பலநாடுகளில் நம் படைகள் உள்ளன, அவற்றை திரும்ப அழைப்பதற்கு இந்த மசோதா உடன்படவில்லை. இதுவும் எனக்கு ஏற்புடையதல்ல. தேவையற்ற நீண்ட போரில் நம் படைகள் ஈடுபடத்தான் வேண்டுமா?
என்று தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார்.
ஆனால் இதை நிராகரிக்கும் வகையிலான விவாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரும் 28ம் தேதி விவாதிக்கப்படவுள்ளன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.