• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • எம்.பி.க்களுக்கு மிரட்டல்: தொடரும் டிரம்பின் ஆட்டம்; கேப்பிடோல் வளாகத்தில் மீண்டும் வன்முறைக்குத் திட்டம்

எம்.பி.க்களுக்கு மிரட்டல்: தொடரும் டிரம்பின் ஆட்டம்; கேப்பிடோல் வளாகத்தில் மீண்டும் வன்முறைக்குத் திட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

வன்முறையைத் துாண்டியதாக, டிரம்ப் மீது, கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதிநிதிகள் சபையில் அது நிறைவேறியது. செனட் சபையில், வரும், பிப்., 8 ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

  • Share this:
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீதான விசாரணை, விரைவில் நடக்க உள்ள நிலையில், பல, எம்.பி.,க்களுக்கு மிரட்டல்கள் வருவது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் கலவரங்களை நிகழ்த்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன், சமீபத்தில் பதவியேற்றார். முன்னதாக, அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது.

    அதிபராக இருந்த, டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    வன்முறையைத் துாண்டியதாக, டிரம்ப் மீது, கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதிநிதிகள் சபையில் அது நிறைவேறியது. செனட் சபையில், வரும், பிப்., 8 ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், பல, எம்.பி.,க்குக்கு மிரட்டல்கள் வருகின்றன. கொலை செய்யப் போவதாகவும், நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கப் போவதாகவும், பலருக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. சமூக வலை தளங்களில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் மற்றொரு வன்முறை சம்பவம் நடப்பதை தடுக்க, தேவையான ஏற்பாடுகளில், பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: