ஹோம் /நியூஸ் /உலகம் /

தூய்மை பற்றி இந்தியாவுக்கு அக்கறை இல்லை என ட்ரம்ப் விமர்சனம்!

தூய்மை பற்றி இந்தியாவுக்கு அக்கறை இல்லை என ட்ரம்ப் விமர்சனம்!

ட்ரம்ப்

ட்ரம்ப்

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கு சுற்றுச்சூழலில் அக்கறை இல்லை.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவில் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், தூய்மை பற்றி இந்தியாவுக்கு அக்கறை இல்லை என அமெரிக்க அதிபர் டினால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கு சுற்றுச்சூழலில் அக்கறை இல்லை எனத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த நாடுகளில் மாசுபாடு நிறைந்து காணப்படுவதாக விமர்சித்துள்ளார்.

கார்பன்-டை-ஆக்சைடை அதிகளவு வெளியேற்றும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தாலும், அந்த நாட்டை விட இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் காற்று மாசுபாடு அதிகளவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்கா தான் உலகிலேயே தூய்மையான நாடு. தாங்கள் இன்னும் மேம்பட்டு வருகிறோம்.

ஆனால், இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளில் தூய்மையான காற்றும், நீரும் கிடைப்பதில்லை. தூய்மை பற்றி அந்த நாடுகளுக்கு பொறுப்புணர்வு இல்லை எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் பார்க்க:

Published by:Tamilarasu J
First published:

Tags: Clean india, Donald Trump