மீண்டும் வெற்றிபெற சீனாவை நாடிய டிரம்ப்...? சர்ச்சை புத்தகத்திற்கு திடீர் தடை
மறு தேர்தலில் போட்டியிட சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உதவியை டிரம்ப் நாடியதாக அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.

ட்ரம்ப், ஜீ ஜின்பிங்
- News18 Tamil
- Last Updated: June 18, 2020, 2:13 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க உள்ள நிலையில், ’அந்த சம்பவம் நிகழ்ந்த இடம்’ என்ற பெயரில் ஜான் போல்டன் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். வரும் 23-ம் தேதி வெளியாகவிருந்த அந்த புத்தகத்திற்கு நேற்று திடீரென தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் ட்ரம்ப் - சீனா உறவு குறித்து புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக சில கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் அமெரிக்காவின் விவசாய பொருட்களை சீனா அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என ஜி ஜின்பிங்கிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Also read... 30 நிமிடங்களுக்கு சார்ஜிங்: தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முகக்கவசம்...
இதன்மூலம் மறு தேர்தலில் தான் எளிதாக வெற்றி பெற முடியும் என டிரம்ப் நம்பியதாகவும் போல்டன் கூறியுள்ளார்.
Also read... 30 நிமிடங்களுக்கு சார்ஜிங்: தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முகக்கவசம்...
இதன்மூலம் மறு தேர்தலில் தான் எளிதாக வெற்றி பெற முடியும் என டிரம்ப் நம்பியதாகவும் போல்டன் கூறியுள்ளார்.