ஹோம் /நியூஸ் /உலகம் /

வடக்கு கரோலினாவை பேரழிவை சந்தித்த பகுதியாக அறிவித்தார் ட்ரம்ப்

வடக்கு கரோலினாவை பேரழிவை சந்தித்த பகுதியாக அறிவித்தார் ட்ரம்ப்

வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினா

வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஃபுளோரன்ஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கரோலினா மாகாணத்தை பேரழிவு பாதித்த பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

  அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை காலை, வடக்கு கரோலினாவின் ரைட்ஸ்வில்லி பகுதியில் கரையை கடந்தது. ஃபுளோரன்ஸ் புயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறிவிட்டாலும், அது கடுமையான பொருள் சேதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

  மேலும் புயல் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 60 சென்டி மீட்டர் வரை பல இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், அது ஒரு மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்கு மற்றும் வடக்கு கரோலினா மாகாணங்களைச் சேர்ந்த 10,00,000 பேர் மின்வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், வடக்கு கரோலினா மாகாணத்தை பேரழிவு பாதித்த பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒஹாயோ நோக்கி நகர்ந்து வரும் ஃபுளோரன்ஸ் புயல் திங்கள்கிழமை வலுவிழக்கும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Disaster declaration, Donald Trump, Hurricane Florence, North Carolina