ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையொப்பமிட்டார்.
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான்- அமெரிக்கா இடையே கடும் உரசல் நீடித்து வந்த நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யத் தடை விதிக்கப்படுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கான ஆணையில் கையெழுத்திட்ட அவர், ஈரானுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனோ மோதுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.