ஹோம் /நியூஸ் /உலகம் /

நிச்சயமாக உதவுவோம்! காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் தலையிட முயற்சிக்கும் டொனால்ட் டிரம்ப்

நிச்சயமாக உதவுவோம்! காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் தலையிட முயற்சிக்கும் டொனால்ட் டிரம்ப்

அதிபர் டிரம்புடன் பாக்., பிரதமர் இம்ரான் கான்

அதிபர் டிரம்புடன் பாக்., பிரதமர் இம்ரான் கான்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

  சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் டாவோஸ் பொருளாதார மாநாட்டுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அங்கு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.

  நீண்ட ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் நிலையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். காஷ்மீர் குறித்து இம்ரான் கானுடன் கலந்துரையாட உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தங்களால் முடிந்த உதவியை செய்ய உள்ளதாகவும் டிரம்ப் உறுதியளித்தார்.

  மேலும், காஷ்மீர் பிரச்னை குறித்து பிரதமர் மோடியிடம் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நல்ல உறவு இருப்பதாக சுட்டிக்காட்டிய அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் இன்று இருப்பதைப் போல ஒருபோதும் நெருக்கமாக இருந்ததில்லை என்றார்.

  இதைத் தொடர்ந்து பேசிய இம்ரான் கான், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது என குற்றம்சாட்டினார். எல்லை பிராந்தியத்தில் பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்புகிறது என்றும் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து டிரம்புடன் பேசியதாகவும் இம்ரான் கான் கூறினார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Donald Trump