வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து: டிரம்ப் அரசு அறிவிப்பு

ஆன்லைன் முலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து: டிரம்ப் அரசு அறிவிப்பு
(Reuters) கோப்புப் படம்
  • Share this:
கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க அரசு கடந்த வாரம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் கல்வி நிறுவனம் தரப்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் படிக்க...


10 மாதங்கள்... 150 கிலோ தங்கம்.. கேரள தங்கக்கடத்தல் விசாரணையில் அதிர்ச்சி தகவல்...

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது குடியேற்றத்துறை சார்பில் ஆஜரான அதிகாரிகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading