ஹெச்1-பி விசா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஹெச்1பி விசா பெறுவதற்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஹெச்1-பி விசா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப்
  • Share this:
அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில், ஹெச்1பி மற்றும் எல்1 விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்குள் வருவதற்கு இந்த ஆண்டு இறுதி வரை தடைவிதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூன் 22-ம் தேதி உத்தரவிட்டார். இது இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தொழில் நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த நிறுவனத்தில் ஏற்கனவே இருந்த பொறுப்புக்கு மீண்டும் வருவதாக இருந்தால் விசா வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க...6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்: கொந்தகையில் முழு உருவ மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு..


இதற்காக 5 விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்தபட்சம் 2 விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் விசா வழங்கப்படும். இதன்மூலம், அங்கு பணியில் இருந்த இந்தியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading