அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப்: புதிய அதிபரிடம் பதவியை ஒப்படைப்பாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடுகளை பற்றி உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்துவருகிறார்.

அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப்: புதிய அதிபரிடம் பதவியை ஒப்படைப்பாரா?
டிரம்ப்
  • Share this:
அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க டெனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நிகழ்வதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தலில் தோல்வியடையும்பட்சத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய அதிபரிடம் பதவியை ஒப்படைப்பாரா என்ற கேள்வியெழுந்துள்ளது.

மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 4 நாட்களாக நடைபெற்றது. ஜோ பைடனுக்கும் - டிரம்ப்புக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. ஆனால் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த ஜோ பைடன் 279 வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்காவின் முதல் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தற்போதைய அதிபர் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறியுள்ள டிரம்ப் சட்டநடவடிக்கைளில் மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பெனிசில்வேனியாவில் வாக்குப்பதிவுக்கான காலக்கெடு முடிந்த பின்னர் கொண்டு வரப்பட்ட வாக்கு பெட்டிகளை அகற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வாக்குப்பெட்டிகளின் மீதான நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுந்தால், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.


இதனிடையே, அமெரிக்க மக்கள் நியாயமான தேர்தல்களுக்கு தகுதியானவர்கள் எனக் கூறியுள்ள மெலானியா டிரம்ப், ஜனநாயகத்தை வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
First published: November 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading