விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியா கண்டனம்
கனடா, எப்போதும் அமைதியாக நடைபெறும் போராட்டத்துக்கு துணை நிற்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ
- News18 Tamil
- Last Updated: December 1, 2020, 3:30 PM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி - ஹரியானா மாநில எல்லைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான டிராக்டர், லாரிகளில் பேரணியாக வந்து டெல்லி புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் சனிக்கிழமை முதல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீக்கிய குரு குருநானக்கின் 551-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆன்லைனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த சூழ்நிலை கவனத்துக்குரியது. நான் எல்லாரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குறித்து கவலை கொள்கிறோம். எனக்குத் தெரியும் இதுதான் பலருடைய நிலைமை. அமைதியான போராட்டங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணையாக இருக்கும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சவா, ‘இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டின் தலைவர்கள் தேவையற்ற கருத்துகள் பகிர்வதைப் பார்க்க முடிந்தது. இத்தகைய கருத்துகள் தேவையற்றவை’ என்று குறிப்பிட்டார். கனடா பிரதமரின் கருத்து குறித்து தெரிவித்த சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ‘உங்களுடைய அக்கறை உள்ளத்தை தொடுகிறது. ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். மற்ற நாட்டு அரசியலுக்கு இது உணவு அல்ல. நாங்கள் மற்ற நாடுகளுக்கு அளிக்கும் மதிப்புகளை நீங்களும் அளியுங்கள்’ என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
சீக்கிய குரு குருநானக்கின் 551-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆன்லைனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த சூழ்நிலை கவனத்துக்குரியது. நான் எல்லாரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குறித்து கவலை கொள்கிறோம். எனக்குத் தெரியும் இதுதான் பலருடைய நிலைமை. அமைதியான போராட்டங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணையாக இருக்கும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சவா, ‘இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டின் தலைவர்கள் தேவையற்ற கருத்துகள் பகிர்வதைப் பார்க்க முடிந்தது. இத்தகைய கருத்துகள் தேவையற்றவை’ என்று குறிப்பிட்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்