ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (Azadi Ka Amrit Mahotsav) கொண்டாட்டத்தின் போது தலைநகர் மாஸ்கோவில் பாராசூட்டில் இருந்து இந்திய தேசியக் கொடியை பறக்கவிட்ட நிகழ்வு பார்ப்போருக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
ரஷ்யாவில் நடுவானில் ஒரு ஸ்கை டைவர் பாராசூட்டில் இருந்து மூவர்ணக் கொடியை விரிக்கும் வீடியோவை இந்திய தூதரகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ், ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தை கொண்டாடும் போது ரஷ்ய வானில் மிகுந்த பெருமையுடன் பறக்கும் நம் தேசியக் கொடி’ என்று குறிப்பிட்டுள்ளது.
High above in the skies of #Russia the #Tiranga is unfurled with great pride as we celebrate the #AzadiKaAmritMahotsav #HarGharTiranga campaign@narendramodi @DrSJaishankar @AmbKapoor @MEAIndia @IndianDiplomacy @AmritMahotsav @DDIndialive @ANI pic.twitter.com/hX6DqNJmUd
— India in Russia (@IndEmbMoscow) August 14, 2022
1 நிமிடம் 26 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஸ்கை டைவர் தரையில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பாராசூட்டில் காற்றில் மிதந்தபடி இந்திய தேசியக் கொடியை விரிப்பதும், அப்போது மூவர்ணக் கொடி வானில் மிடுக்காக பறப்பதும் பதிவாகியுள்ளது.
இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் நேரத்தில், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் பல்வேறு தூதரகங்கள் நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. நியூயார்க்கில் உள்ள இந்திய கவுன்சில் ஜெனரல் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி, கலை நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் கலாச்சார விழாவை ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1930-ம் ஆண்டு மார்ச் 12-ம் நாள் தொடங்கிய மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை (Dandi Yatra) நினைவுகூரும் வகையில் சபர்மதியில் இருந்து தண்டி வரை நடைபயணத்தை பிரதமர் மோடி கடந்தாண்டு மார்ச் 12-ம் தேதி கொடியசைத்து தொடங்கிய ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Independence day, India, Russia