போலி ஆண்குறி வைத்து பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக பிரிட்டன் நாட்டில் தர்ஜித் சிங் என்வருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. பிரிட்டன் நாட்டின் 32 வயதான மாற்று பாலின நபர் தர்ஜித் சிங். பெண்ணாக பிறந்த இவர் ஹன்னா வால்டர்ஸ் என்ற பெயரில் வளர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தன்னை ஆண் பாலினத்தவராக (திருநம்பி) அடையாளம் கண்டு மாறத் தொடங்கினார். தர்ஜித் சிங் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்ட இவர் 16 வயது கொண்ட பிரிட்டன் பெண் ஒருவருடன் நெருங்கிப் பழகி உறவு கொண்டுள்ளார்.
தான் ஒரு மாற்று பாலின ஆண் என்ற அடையாளத்தை அந்த பெண் முன் வெளிக்காட்டவே அவர் விரும்பவில்லை. இதற்காகவே செயற்கையாக ப்ராஸ்தெட்டிக்ஸ் ஆண்குறி ஒன்றை வாங்கி, உடல் உறவின் போது அதை அணிந்துகொண்டுள்ளார். ஆரம்ப காலத்தில் உறவின் போது அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வர பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், இந்த உறவின் போது தர்ஜித் சிங் அந்த பெண்ணை தாக்கி, மோசமாக நடத்தியதாகவும், பின்னர் உறவுகளில் இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் சகஜம் எனக் கூறியதாகவும் நீதிமன்ற வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்றெல்லாம் அவர் மிரட்டியுள்ளார். தனது வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தை அந்த நபர் களவாடிவிட்டதாகக் கூறிய அந்த பெண், இதில் இருந்து மீண்டு வரவே பல காலம் தனக்கு பிடித்தாக முறையிட்டார்.
இதையும் படிங்க:
போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் மற்றும் அவரது மனைவி செயலால் கொத்தி எழுந்த மக்கள்
பெண் தரப்பு வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதி ஆஸ்கர் டெல் பேப்ரோ, தர்ஜித் சிங் மிக மோசமான செயலில் ஈடுபட்டதாகவும், உறவில் உண்மையாக இல்லாமல் தனது அடையாளத்தை மறைத்து ஒரு பெண்ணை ஏமாற்றுவது மாபெரும் குற்றம் எனக் கூறினார். இந்த குற்றம் உறுதியானதால் தர்ஜித் சிங்கிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.